Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு குலசை கோயிலில் கூழ் ஊற்றும் விழா

உடன்குடி, ஆக. 12: குலசை கோயிலில் ஆடி கடைசி செவ்வாயை முன்னிட்டு கூழ் ஊற்றும் விழா நடந்தது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் ஆடிக்கொடை விழா, கடந்த 3ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை நடந்தது. கொடை விழாவின் 8வது நாள் பூஜை மற்றும் கடைசி செவ்வாயை முன்னிட்டு சிறப்பு பூஜை நேற்று (11ம் தேதி) நடைபெற்றது. இதையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

ஆடி மாத கடைசி செவ்வாயை முன்னிட்டு மண்டகபடிதாரர் தஞ்சாவூர் நடராஜன் சுந்தரி தலைமையில் பக்தர்களுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உடன்குடி ஒன்றிய திமுக செயலாளர் மதன்ராஜ், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் செந்தில்சிங் பாபு, உடன்குடி ரம்ஜான், குலசை சிதம்பரம், நூலகர் மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.