Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கடலுக்கு சென்ற மீனவர் மாயம்

தூத்துக்குடி, ஆக. 12: தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளத்தை சேர்ந்தவர் அந்தோணியார் பிச்சை. இவருக்கு சொந்தமான விசைப்படகில், நேற்று முன்தினம் தாளமுத்துநகரை சேர்ந்த பனிமயராஜா(25) உள்பட 10 பேர் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தூத்துக்குடியில் இருந்து சுமார் 7 கடல்மைல் தொலைவில் சென்று கொண்டிருந்த போது, படகில் இருந்த பனிமயராஜாவை காணவில்லை.

இதனால் அவர் கடலில் தவறி விழுந்து இருக்கலாம் என்று சக மீனவர்கள் அப்பகுதியில் தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தொடர்ந்து தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் சக மீனவர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, 3 படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று காணாமல் போன பனிமயராஜாவை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து தருவைகுளம் மரைன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.