கயத்தாறு, டிச.10: வெள்ளாளன்கோட்டை பஞ்சாயத்திற்கு உட்பட்ட சூரியமினிக்கன் கிராமத்தின் அருகேயுள்ள குளத்திற்குள் தனியார் காற்றாலை நிறுவனம் சார்பில் மின்கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கயத்தாறு தாலுகா அலுவலகத்திற்கு திரண்டுவந்தனர். இதையடுத்து தாசில்தார் அப்பனராஜ் தலைமையில் நடந்த சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதோடு ஆதார், ரேஷன் கார்டுகளை தாலுகா அலுவலகம் முன்பாக கொட்டுவோம் எனக்கூறி பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். அத்துடன் தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
+
Advertisement


