நாசரேத், டிச.10: நாசரேத் அருகே பிள்ளையன்மனை ஜி.வி. ஞானமுத்து நடுநிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா, ஆண்டு விழா என இருபெரும் விழா நடந்தது. தலைமை வகித்த சேகர தலைவர் டேனியல் ஆல்பிரட் ஜெபித்து விழாவைத் துவக்கிவைத்தார். தலைமை ஆசிரியை லோவிசாள் வரவேற்றார். இதையொட்டி மாணவ- மாணவிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். இதையடுத்து விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் சாமுவேல் ராஜேந்திரன், திலகர், சேகர செயலாளர் கோயில்ராஜ், சபை ஊழியர்கள் டென்சிங், சைமன், ஆசிரியைகள் எலிசபெத் ஹேனா,இவாஞ்சலின் தர்மாவதி,டெய்சி அனுசுயா மற்றும் மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
+
Advertisement


