ஸ்பிக்நகர், டிச. 10: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் பி.டி. ஆறுமுகம் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் மாசாணமுத்து (38). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சுரேஷ் (20) என்பவர் மாசானமுத்துவை மிதித்தார். மேலும் இதுகுறித்து கேட்டபோது அவதூறாகப் பேசியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்த முத்தையாபுரம் போலீசார், மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தனர். கைதான சுரேஷ் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
+
Advertisement


