Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மேல்மாந்தையில் ஆண்களுக்கான கபடி போட்டி

குளத்தூர், ஆக. 9: மேல்மாந்தையில் ஆண்களுக்கான கபடி போட்டிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். விளாத்திகுளம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்மாந்தை பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் கொடைவிழாவையொட்டி ஆண்களுக்கான கபடி போட்டிகள் நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு கபடி போட்டிகளை துவக்கிவைத்தார். தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட அளவிலான சுமார் 32அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இறுதி போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கினர். நிகழ்ச்சியில் விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, கிளை செயலாளர்கள் வெள்ளைச்சாமி, நல்லமுத்து, இளைஞர் அணி முகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.