ஆறுமுகநேரி, ஆக. 8: திருச்செந்தூரில் நடந்த குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் புன்னக்காயல் பள்ளி அணி சாதனை படைத்துள்ளது. திருச்செந்தூர் தனியார் உடற்கல்வியியல் கல்லூரியில் திருச்செந்தூர் குறுவட்ட அளவிலான தடகளப்போட்டிகள், 2 நாட்கள் நடந்தது. இதில் 72 பள்ளிகளைச் சேர்ந்த 560 மாணவர்கள், 529 மாணவிகள் என 1089 பேர் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பிரிவில் புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி அணி 2வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. சாதனை படைத்த மாணவ- மாணவியரை பள்ளி தலைமை ஆசிரியர் செபஸ்டின் ராஜா மற்றும் ஆசிரியர்கள், ஊர் மக்கள் பாராட்டினர். ஏற்பாடுகளை புன்னக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.




