தூத்துக்குடி, ஆக. 8: தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட ஜெ.பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடியில் இன்று(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்கிறார். இதுகுறித்து தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில், ஜெ.பேரவை சார்பில் மாவட்ட வாரியாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன்படி தூத்துக்குடி வடக்கு, தெற்கு மாவட்ட ஜெ. பேரவை நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், தூத்துக்குடி கனி பேலசில் இன்று(சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. எனது தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஜெ. பேரவை மாநில செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார். இதில் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, வட்ட, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் மகளிரணியினர் பங்கேற்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



