உடன்குடி, ஆக. 8: ஆறுமுகநேரி காமராஜர்புரத்தைச் சேர்ந்த பாலமுருகன் மகன் ஆகாஷ் (20). இவர், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில்ஆடிக் கொடை விழாவிற்கு தனது பைக்கில் வந்துள்ளார். பைக்கை குலசை கருங்காளியம்மன் கோயில் முன்பு இரவு நிறுத்தி விட்டு கொடை விழா பார்க்கச் சென்றுள்ளார். பின்னர் காலையில் பைக்கை எடுக்க வந்தபோது மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசில் ஆகாஷ் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement



