Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

70 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

தூத்துக்குடி, ஆக. 5: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் வகையில், ஆணையர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட ஜெயராஜ் ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின் போது, அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடைகளில் இருந்து 70 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், கடை உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.6,700 அபராதம் விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தும் கடைகள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கடை உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.