திருச்செந்தூர், அக். 2: சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு புகைப்படத்தை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்து திருச்செந்தூர் ஒன்றிய விசிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல்லில் புதிய தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு புகைப்படத்தை அவமதிப்பு செய்த போராட்டக்காரர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யக்கோரி திருச்செந்தூர் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் ராஜலிங்கம் என்கிற புரட்சியாளன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் முரசு தமிழப்பன், இளைஞரணி மாநில துணை செயலாளர் சங்கத்தமிழன், மாவட்ட பொருளாளர் தமிழ்வாணன், மகளிர் விடுதலை இயக்க மாநில துணை செயலாளர் சர்மிளா, மாநில பொறுப்பாளர் அந்தோணி, முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தமிழ் பரிதி, திருச்செந்தூர் நகர பொறுப்பாளர் நந்தன், ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


