தூத்துக்குடி, நவ.1: தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டவர்கள், அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தூத்துக்குடி வளையானந்த சுவாமி கோயில் தெரு செல்வசித்ரா, சிவன் கோயில் தெரு மகாராஜன், அண்ணாநகர் பாலகுருசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளதாக இந்துசமய அறநிலைய துறை இணை ஆணையர் அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும் இவர்கள் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் அறங்காவலர் குழு தலைவர் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக நியமிக்கபட்டுள்ள செல்வசித்ரா, மகாராஜன், பாலகுருசாமி ஆகியோர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன் உடனிருந்தார்.
+
Advertisement

