Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கயத்தாறில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறு, ஆக. 1: கயத்தாறில் அனைத்து விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ங்க தலைவர் மூவி சுந்தர் தலைமை வகித்தார். கல் குவாரிகளால் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் குவாரிகளை தடை செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். 2025-26ம் ஆண்டிற்கான உளுந்து பயிர்கள் முழுவதும் பாதிப்படைந்ததால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

காட்டுப்பன்றிகள் விவசாயப் பயிர்களை தொடர்ந்து அழித்து வருவதால் விவசாயத்தை பாதுகாக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தக்கல் முறையில் மின்சாரத்திற்கு பணம் செலுத்தி பதிவு செய்த விவசாயிகளுக்கு மின் இணைப்பை விரைவில் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் திமுக பேரூர் செயலாளர் சுரேஷ் கண்ணன், விசிக ஒன்றிய செயலாளர் சூர்யா உள்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.