Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் கார் மோதி மின்கம்பம் சேதம்

ஸ்பிக்நகர், மே 1: தூத்துக்குடி அருகே கார் மோதியதில் மின்கம்பம் சேதமடைந்து விழுந்தது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் பசுமணி நகர் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அசோக்குமார்(37). இவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று விட்டு தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் வந்து கொண்டிருந்தார். முத்தையாபுரம் அருகே வந்தபோது காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் தறிகெட்டு ஓடிய கார், அருகில் இருந்த சென்டர் மீடியனில் இருந்த மின்கம்பத்தின் மீது மோதி சேதமடைந்தது.விபத்து ஏற்பட்டவுடன் காரின் ஏர்பேக் ஓபன் ஆனதால் அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து அனைவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். மின்கம்பம் தூத்துக்குடி -திருச்செந்தூர் சாலையில் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின்கம்பத்தை சரி செய்தனர். விபத்து குறித்து முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.