Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் உலக புத்தக நாள் தினம்

தூத்துக்குடி, மே 1: தூத்துக்குடியில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி காரப்பேட்டை நாடார் துவக்கப்பள்ளியில் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் உலக புத்தக நாள் தின விழா கொண்டாடப்பட்டது. கருவூலத்துறை பணி நிறைவு அலுவலர் துரை கணேசன் தலைமை வகித்தார். தமிழ் இலக்கிய பேரவை செயலாளர் ஆதி அருமைநாயகம் வரவேற்றார். பட்டுக்கோட்டையாரின் பட்டுக்கோட்டை என்ற தலைப்பில் வழக்கறிஞர் ஹரிதாஸ், பாவேந்தரின் புரட்சி பாடல்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆசிரியர் பிரபு அப்பாசாமி, புதுமைப்பித்தனின் படைப்பு உலகம் என்ற தலைப்பில் சங்கரலிங்கம் ஆகியோர் பேசினர். தமிழ் இலக்கிய பேரவை பொருளாளர் பூபால் செல்லையா நன்றி கூறினார்.