Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

விசிக பிரமுகர் கொ* மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி, நவ. 3: தூத்துக்குடி அடுத்த சோட்டையன்தோப்பு பகுதியை சேர்ந்த விசிக பிரமுகர் பாலமுருகன் (எ) பாலா (43), நேற்று முன்தினம் காலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசார் வழக்குப் பதிந்து பொன்பாண்டி (எ) ரவி (44), சிவா (எ) சிவச்சந்திரன் (22), சிவக்

குமார்(22), கோகுல்நாத் (24), மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய தூத்துக்குடி மாதா நகரை சேர்ந்த ரமேஷ்கண்ணன் (23) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து பால முருகனின் குடும்பத்தினர், அவரது உடலை பெற்று நேற்று மாலை அடக்கம் செய்தனர்.

இந்நிலையில் விசிகவினர் மற்றும் பாலமுருகன் குடும்பத்தினர், கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து கலெக்டர் விஷூ மகாஜனை சந்தித்து மனுவில் கூறியிருப்பதாவது: கொலை செய்யப்பட்ட பாலமுருகன் (எ) பாலா குடும்பத்துக்கு உரிய இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.

பாலமுருகன் குடும்பத்தினருக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் உள்ளது. அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இந்த கொலையில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறைபடுத்த வேண்டும். அவர்கள் ஜாமீனில் வெளியே வராத வகையில் உரிய காலக்கெடுவில் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உரிய தண்டனை பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதி அளித்தார்.