Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கஞ்சா வழக்கில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

தூத்துக்குடி, நவ. 2:திருச்செந்தூர் ஆலந்தலை சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் மாணிக்கம்(36). இவர் கஞ்சா விற்பனை செய்ததாக குரும்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதைதொடர்ந்து மாணிக்கத்தை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தூத்துக்குடி எஸ்பி சிவபிரசாத் பரிந்துரை செய்தார். அதன்பேரில் கலெக்டர் விஷூமகாஜன், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் மாணிக்கத்தை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை குரும்பூர் போலீசார் பாளை மத்தியசிறையில் வழங்கினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் இதுவரை கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 129 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.