Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

குலசை கோயிலில் திருவிளக்கு பூஜை

உடன்குடி, ஆக. 29: குலசை கோயிலில் நடந்த பவுர்ணமி திருவிளக்கு பூஜையில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று வழிபட்டனர். குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் ஆவணி மாத பவுர்ணமி திருவிளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு 8 மணிக்கு காலசந்தி பூஜை, மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.30 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மூலஸ்தான தீபாராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.