ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி எஸ்ஐ சுந்தரம், ஏட்டுகள் ஜெயகாந்த், வேல்மணி, போலீசார் கஜேந்திரன், சண்முகம் ஆகியோர் காயல்பட்டினத்தில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது மங்களவிநாயகர் கோயில் தெருவில் அரிவாளுடன் ரகளை செய்த வாலிபரை மடக்கி பிடிக்க முயன்றனர். போலீசாரை அவதூறாக பேசிய வாலிபர், அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து வெட்ட முயன்றுள்ளார்.
இருப்பினும் அவரை போலீசார் சுற்றி வளைத்து மடக்கினர். விசாரணையில் அவர், இதே தெருவை சேர்ந்த கணேசன் மகன் சுரேஷ் (26) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரென்னிஸ் வழக்கு பதிந்து சுரேசை கைது செய்தார். விசாரணைக்கு பிறகு திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி வை. கிளை சிறையில் அடைத்தனர். சுரேஷ் மீது கஞ்சா, புகையிலை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.


