திருச்செந்தூர்: நவம்பர் 15ம் தேதி நடைபெற உள்ள சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையை சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா, வரும் நவ.10ம் தேதி தொடங்கி சிகர நிகழ்ச்சியாக நவ.15ம் தேதி மாலை 4.30 மணியளவில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க இருப்பதால் திருக்கோயில் வளாகத்தில் கந்தசஷ்டி விரதம் இருப்பதற்காக தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணியும், சூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரையை சமன்படுத்தும் பணியும் தற்போது தொடங்கி நடந்து வருகிறது.
கடற்கரையில் அய்யா கோயில் அருகில் இருந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மணல்மேடுகள் அகற்றப்பட்டு சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் பணி முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு கடற்கரையில் கம்புகளான சாரங்கள் அமைக்கப்பட உள்ளது. தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் வாலிபருக்கு வலை தூத்துக்குடி, அக். 28: தூத்துக்குடியில் போக்சோ வழக்கில் கடை ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் அடுத்த எம்.தங்கம்மாள்புரத்தை சேர்ந்த அந்தோணிராஜ் மகன் முத்துராஜ் (22). இதே பகுதியில் உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவர், தூத்துக்குடியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். மேலும் மெசெஞ்சர் மூலம் சிறுமிக்கு ஆபாச குறுந்தகவல்களை அனுப்பி வந்துள்ளார். சிறுமியுடன் எடுத்துக் கொண்ட போட்டோக்களை இன்ஸ்டா ஐடியில் பகிர்ந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் தாயார் தட்டிக் கேட்கவே, அவருக்கு முத்துராஜ் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசில் சிறுமியின் தாயார் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து முத்துராஜை தேடி வருகின்றனர்.


