Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் மறைமாவட்ட வின்செந்தியர், இளையோருக்கான திருப்பலி

தூத்துக்குடி, ஜூலை 28: தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழாவில் மறைமாவட்ட வின்செந்தியர் மற்றும் இளையோருக்கான திருப்பலி நடைபெற்றது. தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2ம் நாளான நேற்று காலையில் திருப்பலி மற்றும் காந்திநகர் பங்கு இறைமக்கள், லூர்தம்மாள்புரம் இறைமக்கள், திருஇருதய அருட்சகோதரிகள், புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்கு இறைமக்கள் மற்றும் புதுக்கோட்டை அந்தோணியார்புரம் பங்குகளின் இறைமக்கள், செயின்ட் ஜோசப் மெட்ரிக். மேல்

நிலைப்பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

முற்பகல் 11 மணிக்கு மறைமாவட்ட வின்செந்தியருக்கான திருப்பலி, மாலையில் இளையோருக்கான திருப்பலி, பரிசுத்த அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபை ஆகியோருக்கான சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியில் புதுக்கோட்டை பங்குத்தந்தை லாரன்ஸ் மறையுரை ஆற்றினார். திருவிழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜான்செல்வம், உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, களப்பணியாளர் மைக்சன் மற்றும் சவேரியானா இயேசு சபையினர், லசால் அருட்சகோதர்கள், அடைக்கல அன்னை,அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர், இறைமக்கள் செய்திருந்தனர்.