Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சிவகளையில் அகழாய்வு குழிகள்

ஏரல், ஆக. 26: சிவகளையில் நடைபெற்ற அகழாய்வு பணிகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதேபோல் பெருங்குளம் குளத்திற்கு வருகை தந்துள்ள பறவைகளையும் பார்வையிட்டார். ஏரல் அருகேயுள்ள பெருங்குளம் குளத்தில் கோடை முடிந்தும் வெயில் சுட்டெரிப்பதால் தண்ணீர் வற்றி குட்டைப்போல் காணப்படுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் மீன்களை வேட்டையாட பல ஆயிரக்கணக்கான உள்நாட்டு பறவைகள் மற்றும் வெளிநாட்டு பறவைகள் குவிந்துள்ளன. இதையடுத்து பெருங்குளத்தில் இருந்து சிவகளை வழியாக செல்லும் பொதுமக்கள் இந்த குளத்து கரையோரத்தில் நின்று பறவைகள் மீன்களை வேட்டையாடுவதை பார்த்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று காலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் விஷூ மகாஜன், பெருங்குளம் குளத்திற்கு வந்து கரையோரத்தில் நின்று உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகளை பார்வையிட்டார். தொடர்ந்து அவர், சிவகளையில் நடைபெற்ற அகழாய்வு குழிகள், ஈமத்தாழிகள் மற்றும் அகழாய்வு பணியில் கண்டெடுக்கப்பட்ட 3200 ஆண்டுகளுக்கு முந்தைய நெல் மணிகள், கத்தி உள்ளிட்ட பொருட்களையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாவட்ட வன அலுவலர் இளையராஜா, உதவி கலெக்டர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், முத்தாலங்குறிச்சி காமராசு, சிவகளை ஆசிரியர் மாணிக்கம் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.