தூத்துக்குடி, அக். 23: தூத்துக்குடியில் சட்டவிரோதமாக 2 பாஸ்போர்ட் வைத்திருந்தவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தூத்துக்குடியை சேர்ந்த உசேன் (38), வெளிநாட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் முதலில் வைத்திருந்த பாஸ்ேபார்ட் காணாமல் போய்விட்டது. இதையடுத்து மீண்டும் விண்ணப்பித்து புதிய பாஸ்போர்ட் பெற்றுள்ளார். பின்னர் வேலைக்காக வெளிநாடு சென்று வந்த நிலையில் தொலைந்த பாஸ்போர்ட் கிடைத்துள்ளது. அதனை 2016ம் ஆண்டு புதுப்பித்துள்ளார்.தற்போது மீண்டும் பாஸ்போர்ட் காலாவதியான நிலையில் புதிய பாஸ்ேபார்ட்டிற்கு விண்ணப்பித்துள்ளார்.
இதுகுறித்து பாஸ்ேபார்ட் சேவா கேந்திரா விசாரணையில் தெரிய வந்த நிலையில் அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் மீது சட்டவிரோதமாக இரு பாஸ்போர்ட் வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்ய மாவட்ட எஸ்பி அலுவலகம் மூலம் தூத்துக்குடி வடபாகம் போலீசாருக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து வடபாகம் எஸ்ஐ சிவக்குமார், விசாரணை நடத்தி உசேன் மீது பாஸ்போர்ட் சட்டப்பிரிவுகள் 10 மற்றும் 12(பி) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


