தூத்துக்குடி, அக். 23: தூத்துக்குடி மாவட்ட விரல் ரேகைப் பிரிவில் நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலகத்தில் தனி விரல் ரேகைப் பிரிவு செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று நெல்லை சரக டிஐஜி திருநாவுக்கரசு ஆய்வு மேற்கொண்டார். பணிகள் மற்றும் பதிவேடுகளைப் பார்வையிட்டு, காவல் அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, தூத்துக்குடி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் மற்றும் காவல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் உடனிருந்தனர்.
+
Advertisement


