Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரியின் கூட்டாளிகள் கைது

தூத்துக்குடி, ஜூலை 18: தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரியின் கூட்டாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் கோமஸ்புரம் சுடுகாடு பகுதியில் பைக்கில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தாளமுத்துநகரை சேர்ந்த கார்த்திக்ராஜா என்ற ஜப்பான் (27) என்பவரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 8 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் கார்த்திக்ராஜாவின் கூட்டாளிகளான தாளமுத்துநகர் அருகேயுள்ள வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சேர்மலிங்கசிவா (21), புதியம்புத்தூர் அடுத்துள்ள வரதராஜபுரத்தைச் சேர்ந்த மதன்குமார் (21) ஆகியோர் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.