கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் அனல்மின் நிலைய ஊழியர்கள் நவ.2 முதல் வேலை நிறுத்தம்: இடதுசாரி தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
தூத்துக்குடி, அக். 17: தூத்துக்குடியில் அனல்மின் நிலைய ஊழியர்கள் நவ.2ம் ேததி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக இடதுசாரி மின்வாரிய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. தமிழ்நாடு மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், தூத்துக்குடி அனல்மின் நிலையம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகி அப்பாத்துரை தலைமை வகித்தார். இதில் தூத்துக்குடி அனல்மின் நிலையம் மற்றும் புதிதாக கட்டப்பட்டுள்ள உடன்குடி அனல்மின் நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை உடனடியாக கைவிட வேண்டும்.
மின்பாதைகள் மற்றும் மின் உற்பத்தியை தனியார்மயமாக்கும் திட்டங்களை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், வரும் நவ.2ம் தேதி முதல் மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.


