Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண் அள்ள அனுமதி மறுப்பால் செங்கல் உற்பத்தி முடங்கும் அபாயம்; வாழ்வாதாரத்தை இழக்கும் தொழிலாளர்கள்

வைகுண்டம், ஆக. 17: தூத்துக்குடி மாவட்டத்தில் வைகுண்டம், ஏரல், திருச்செந்தூர், எட்டயபுரம், விளாத்திகுளம் மற்றும் சாத்தான்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செங்கல் உற்பத்தி பிரதானமாக நடைபெறுகிறது. 300க்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத பெரிய செங்கல் சூளைகள் உள்ளன. மேலும் சிறு அளவில் உற்பத்தி செய்யப்படும் ‘செங்கல் கைமால்கள்' சுமார் ஆயிரத்திற்கும் மேல் செயல்படுகின்றன. இத்தொழில் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்து வருகின்றனர்..

தமிழக கட்டுமானத் துறையில் முக்கியப் பங்காற்றும் தூத்துக்குடி மாவட்ட செங்கல் உற்பத்தித் தொழில், தற்போது மூலப்பொருள் கிடைக்காமல் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளைகளுக்கு தேவையான வண்டல் மண் மற்றும் செம்மண் அள்ளுவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் கனிம வளத்துறை முறையான அனுமதி வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மாவட்டத்தில் செங்கல் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும் மண் தட்டுப்பாட்டால் தற்போது 60 சதவீத சூளைகள் மூடப்பட்டுள்ளன.