Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

குளத்தூர் -தருவைகுளம் இடையே சிதிலமடைந்த இசிஆர் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

குளத்தூர், ஆக. 17: குளத்தூர்-தருவைகுளம் இடையே சிதிலமடைந்து காட்சியளிக்கும் கிழக்கு கடற்கரைச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல் சாலையோர ஆக்கிரமிப்பு முட்செடிகளை அகற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர்.தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியான ராமேஸ்வரத்தில் இருந்து சாயல்குடி,வேம்பார், குளத்தூர், வேப்பலோடை, தருவைகுளம், தூத்துக்குடி வழியாக கன்னியாகுமரி வரை செல்லும் கிழக்கு கடற்கரைச்சாலை உள்ளது.

சுற்றுலா பகுதிகளுக்கு செல்லும் இக்கிழக்கு கடற்கரைச்சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்தே காணப்படும். இந்நிலையில் குளத்தூர் பகுதியில் இருந்து தருவைகுளம் வரையிலான சுமார் 14 கிமீ தூரத்திலான சாலை, கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் புதுப்பிக்கப்பட்ட சாலையின் பல இடங்களில் மேடு பள்ளமாகவும், சில இடங்களில் விரிசலும் ஏற்பட்டு தரமற்ற சாலையாக காணப்படுகிறது. இதில் தருவைகுளம் அருகே சாலையில் விரிசல் விட்டு பள்ளமாக மாறி வாகனங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக காட்சியளிக்கிறது.