Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு புதிய பாடப் புத்தகப் பயிற்சி

திருச்செந்தூர், அக். 16:திருச்செந்தூர் ஒன்றியத்தில் 1ம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 2026-27ம் கல்வியாண்டின் 2ம் பருவத்திற்குரிய புதிய பாடப் புத்தகங்களுக்கான 2 நாட்கள் அறிமுக பயிற்சி நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சங்கீதா சின்னராணி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெபா மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் முருகன் ஆகியோர் வழிகாட்டுதலில் திருச்செந்தூர் குமாரபுரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் நடந்த பயிற்சி முகாமில், ஆசிரியர் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளின் படி புதிய பாடநூலை பயன்படுத்தி கற்பித்தல் மற்றும் பாடங்களுடன் இணைந்துள்ள மாணவர்களுக்கான கற்றல் செயல்பாடுகளை வழிநடத்துதல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) சுப்புலட்சுமி பயிற்சியை தொடங்கி வைத்து கருத்துரை வழங்கினார். குமாரபுரம் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுதர்சன் வாழ்த்திப் பேசினார். வட்டார வளமைய ஆசிரியப் பயிற்றுநர் ஜெயலட்சுமி, ஆசிரியர்கள் சித்ரா மேரி சுகிர்தா, பேச்சியம்மாள், ஜெபமலர், செல்வகுமார் கருத்தாளர்களாக செயல்பட்டனர். பயிற்சி ஏற்பாடுகளை திருச்செந்தூர் வட்டார கல்வி அலுவலர் மாணிக்கராஜ் தலைமையில் வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள் ஜெயஹெலன், ஜெகதீஸ் பெருமாள், நபில் புகாரி மற்றும் அருள்ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.