நாசரேத், அக். 16: மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் நாசரேத் பொறியியல் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மண்டல அளவிலான கால்பந்து போட்டிகள், சிவகாசி மெப்கோ பொறியியல் கல்லூரியில் நடந்தது. இதில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் உள்ளிட்ட சுமார் 26 பொறியியல் கல்லூரி அணிகள் பங்கேற்றன. இப்போட்டியில் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரி அணியினர் 2வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநர் ஜோஸ் சுந்தரையும் கல்லூரி தாளாளர் மாமல்லன், முதல்வர் ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.
+
Advertisement


