Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

காப்புக்கயிறை கழற்றிய விவகாரம்: ஆத்தூர் பள்ளி ஹெச்எம் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஆறுமுகநேரி, அக். 15: ஆத்தூர் பள்ளியில் மாணவர்களின் கைகளில் கட்டியிருந்த காப்புக்கயிறை கழற்றிய விவகாரத்தில் ஹெச்எம் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் உள்ள தனியார் பள்ளியில், தசரா திருவிழாவையொட்டி விரதமிருக்கும் மாணவர்கள் கைகளில் கட்டியிருந்த காப்புக்கயிற்றை தலைமை ஆசிரியர் பிலிப் எமர்சன் ரஞ்சித் சிங், கழற்றியதாக கூறப்படுகிறது. அவிழ்க்க மறுத்த சிலரை அடித்ததாகவும் தெரிகிறது. இதையறிந்த மாணவர்களின் பெற்றோர், நேற்று முன்தினம் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஒரு மாணவரின் தாயார் பார்வதி, ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் மாணவனை அசிங்கமாக திட்டியது, அடித்தது மற்றும் மத நம்பிக்கையை அவமதித்தது ஆகிய குற்றச்சாட்டுகளில் 3 பிரிவுகளின் கீழ் பள்ளி தலைமை ஆசிரியர் பிலிப் எமர்சன் ரஞ்சித்சிங் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இதுகுறித்து எஸ்ஐ பொன்முனியசாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.