உடன்குடி, அக். 14: குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 2ம் நாள் இரவில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா திருவிழா, கடந்த 11ம் தேதி துவங்கியது. விழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், மாலையில் சமய சொற்பொழிவு, கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து வேடமணிய திருக்காப்பு அணிந்து வருகின்றனர். 2ம் நாளன்று இரவு இரவு 10 மணிக்கு கற்பக விருட்சம் வாகனத்தில் விஸ்வகர்மேஸ்வரர் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. இத்திருக்கோலத்தில் அம்மனை தரிசித்தால் தொழில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இதில் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று தரிசித்தனர்.


