குளத்தூர், அக். 10: தருவைகுளத்தில் திருட்டு வழக்கில் கைதான சென்னை வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். தருவைகுளம் அன்னை தெரசா தெருவை சேர்ந்த ஆசிரியர் ஜோசப்ராஜ் மற்றும் மாரியப்பன் ஆகியோர் வீடுகளில் நேற்று முன்தினம் திருட்டு சம்பவங்கள் நடந்தது. மாரியப்பன் வீட்டில் புகுந்த மர்மநபரை மடக்கிய உறவினர்கள், தருவைகுளம் இன்ஸ்பெக்டர் சுதாகர்(பொறுப்பு) மற்றும் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் அவர், சென்னை கிண்டி ஆலாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த கருணாகரன் மகன் அரவிந்த்குமார் என்ற அரவிந்தன்(42)என்பதும், இவர் மீது சென்னை பகுதியில் 60க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விளாத்திகுளம் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது அவரது ஆசனவாயில் தங்க செயினை மறைத்து வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து செயினை மீட்ட போலீசார் வழக்கு பதிந்து ஓட்டப்பிடாரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.


