Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தெற்கு மண்டல பகுதிகளில் குடிநீரின்றி தவிக்கும் மக்கள்

ஸ்பிக்நகர், ஆக. 10: தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான அத்திமரப்பட்டி, ஜேஎஸ் நகர், சுந்தர் நகர், பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மாநகராட்சி மூலமாக வழங்கப்படும் குடிநீர், கடந்த 3 நாட்களாக விநியோகிக்கப்படவில்லை. இந்த பகுதிகள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு முன்பு பஞ்சாயத்தாக இருந்த காலங்களில் தெருக்களில் குடிநீர் பைப்புகள் இருக்கும். அதில் பொதுமக்கள் குடிநீர் பிடித்து சேகரித்து வைப்பர். அப்போது வீடுகளில் கிணறுகள் மற்றும் போர்வெல் வசதி இருந்தது.