Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

தூத்துக்குடி வீரபாண்டியன் நகரில் வாட்டமின்றி வாறுகால் அமைப்பு

ஸ்பிக்நகர், ஆக. 10: தூத்துக்குடி மாநகராட்சி 52வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியன் நகரில் புதிதாக போடப்பட்ட வாறுகால் போதுமான வாட்டம் இல்லாததால் கழிவுநீர் தேங்கும் நிலையில் உள்ளது. எனவே விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி 52வது வார்டுக்குட்பட்ட வீரபாண்டியன் நகரில் குடியிருப்பு பகுதிகள், கத்தோலிக்க தேவாலயம், தனியார் மருத்துவமனை மற்றும் மாநகராட்சி நூலகம் அமைந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு கத்தோலிக்க தேவாலயத்தில் இருந்து அத்திமரப்பட்டி சாலை வரை புதிதாக வாறுகால் அமைக்கப்பட்டது. கத்தோலிக்க தேவாலயத்திற்கு முன்னதாக ஏற்கனவே பழைய வாறுகால் இருந்துள்ளது. அந்த வாறுகாலுடன் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலையும் இணைத்துள்ளனர். ஆனால் புதிதாக கட்டப்பட்ட வாறுகாலை விட பழைய வாறுகால் சற்று தாழ்வாக காணப்படுகிறது.