Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருச்செந்தூர் பேருந்து நிலைய வாயிலில் தாறுமாறாக நிறுத்தப்படும் ஆம்னி பஸ்கள்

திருச்செந்தூர், ஜூலை 10: திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பாதையில் தாறுமாறாக நிறுத்தப்படும் ஆம்னி பஸ்களால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு கார், வேன் மற்றும் சுற்றுலா பஸ்சில் வரும் பக்தர்கள் கோயிலில் நாழிக்கிணறு நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு சுவாமி தரிசனத்துக்கு செல்வர். ஆனால் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் பேருந்து மற்றும் ரயில் மூலமாக வரும் பக்தர்கள், பகத்சிங் பேருந்து நிலையத்திலும், ரயில்வே நிலையத்திலும் இறங்கி ஆட்டோ, கார்களில் கோயில் செல்கின்றனர். இதேபோல் பேருந்து நிலையத்தில் இருந்து சுற்றுப்பேருந்துகள் மூலம் ஆண்கள் ரூ.10 கட்டணத்திலும், பெண்கள் இலவசமாகவும் கோயில் வாசல் வரை பயணிக்கின்றனர். இதனால் பகத்சிங் பேருந்து நிலையம் அதிகாலை முதல் இரவு வரை பக்தர்கள் வந்து செல்வதாலும், சுற்றுவட்டார பொதுமக்கள் பயணத்தினாலும் எப்பொழுதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.