தூத்துக்குடி, அக். 9: தூத்துக்குடியில் பைக்கில் இருந்து தவறி விழுந்த அதிமுக நிர்வாகி, தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தூத்துக்குடி ராஜிவ் நகரை சேர்ந்தவர் மாடசாமி (44). இவர், தூத்துக்குடி தெற்கு மாவட்ட எம்ஜிஆர். இளைஞரணி துணை செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். கடந்த 29ம் தேதி ஜார்ஜ் ரோடு கணேசபுரம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.
அருகில் இருந்தவர்கள், அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மாடசாமி, நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


