Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

தூத்துக்குடி மாநகர பகுதியில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் புகார் தெரிவிக்க எண் அறிவிப்பு

தூத்துக்குடி, அக். 9: தூத்துக்குடியில் சாலையில் பள்ளங்கள் இருந்தால் 1800 203 0401 என்ற இலவசத் தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என மாநகராட்சி ஆணையர் பிரியங்கா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதையொட்டி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பிரதான மற்றும் உட்புறச் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை உடனடியாகச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பருவமழையின்போது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில், தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பிரதான சாலைகள்,

உட்புறச் சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கியச் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. அதன்படி ஜேசிபி இயந்திரங்கள், ரோலர்கள் மற்றும் தார்-பிடுமன் கலவை உள்ளிட்ட தேவையான மூலப்பொருட்களைக் கொண்டு, அப்பள்ளங்கள் உடனடியாக மூடப்பட்டுச் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் சேதமடைந்த சாலைகள் மற்றும் ஆபத்தான பள்ளங்கள் இருப்பது தெரியவந்தால், பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சியின் 1800 203 0401 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.