ஆறுமுகநேரி, அக். 8: ஆறுமுகநேரி பாரதி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் மனைவி பூத்தங்கம் (66). இவர்களுக்கு 7 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். பெருமாளும், பூத்தங்கமும் மூத்த மகன் பெரியசாமி புதிதாக கட்டிய வீட்டில் வசித்து வருகின்றனர். பெரியசாமி மும்பையில் வசித்து வருகிறார். பெரியசாமியின் வீட்டருகே உள்ள வீட்டில் கடைசி மகன் சின்னதம்பி வசித்து வருகிறார். மும்பையில் இருக்கும் பெரியசாமி தனது வீட்டை கண்காணிப்பதற்காக சிசிடிவி காமிரா வைத்திருந்தார்.
இதை சின்னதம்பி கழற்றி வைத்து விட்டார். இதுகுறித்து தாய் பூத்தங்கம் தட்டிக் கேட்டார். இதில் ஆத்திரமடைந்த சின்னதம்பி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து தாய் பூத்தங்கம் ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்தார். எஸ்எஸ்ஐ கோயில்பிள்ளை வழக்கு பதிவு செய்தார். எஸ்ஐ சுந்தரம் விசாரணை நடத்தி வருகிறார்.


