Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தொழிலாளி கொலை மேலும் ஒருவர் கைது

தூத்துக்குடி, அக். 8: தூத்துக்குடி அருகே தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் கே.சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் கணேஷ்குமார் (28). புதுக்கோட்டையில் வசித்து வந்த இவர், கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 17ம் தேதி நண்பர்களுடன் இப்பகுதியில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில், நண்பர்கள் அவரை கல்லால் தாக்கியும், கத்தியால் வெட்டியும் கொலை செய்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து புதுக்கோட்டையில் பதுங்கியிருந்த பத்ரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த மாடசாமி மகன் இன்பரசன் (32),

அய்யனார் காலனியை சேர்ந்த சங்கர் மகன் முருகன் என்ற குட்ட முருகன் (25), பவானி நகர், தெற்கு சிலுக்கன்பட்டியை சேர்ந்த அய்யாசாமி மகன் சதீஷ் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சாத்தான்குளத்தை சேர்ந்த வேதநாயகம் துரை (40) என்பவரை புதுக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது ஏற்கனவே சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. ரவுடி பட்டியலிலும் இடம்பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.