Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

உடன்குடியில் சாலையோரம் பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு

உடன்குடி, செப். 7: உடன்குடி பகுதியில் பல இடங்களில் சாலையோரம் எரிக்கப்படும் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் நிலவுகிறது. இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். உடன்குடி பகுதியில் மக்கள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கோயில்கள், பள்ளிகள் உள்ளன. அப்பகுதி சாலை வழியாகத்தான் மாணவ, மாணவியர் கல்வி நிலையங்களுக்கு நடந்து செல்கின்றனர். அப்பகுதியின் பிரதான சாலைகளான திசையன்விளை சாலை, ரேஷன் கடைகள், பல்வேறு அலுவலகங்கள், கோயில், மண்டபம் அமைந்துள்ள முக்கிய சாலை பகுதிகளில் பல இடங்களில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைக் கழிவுகள் குவித்து வைத்து எரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து காலை முதல் இரவு பிளாஸ்டிகள் கழிவுகள், குப்பைகள் எரிந்து கொண்டே இருப்பதால் புகைமூட்டம், அப்பகுதி முழுவதும் பரவிக் காணப்படுகிறது. இதனால் புற்றுநோய், மூச்சுத் திணறல் மற்றும் சுகாதார சீர்கேடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடன்குடி பகுதியில் சாலையோரங்களில் குப்பைகளை எரிக்க தூய்மைப் பணியாளர்களுக்கு தடை விதிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.