மதுரை கோட்டத்தில் பொறியியல் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில்கள் சில தினங்கள் ரத்து
நெல்லை, ஆக. 7: மதுரை ரயில்வே கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடக்கும் பொறியியல் பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் இம்மாதத்தில் சில தினங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மதுரை கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக, நடப்பு ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் சில ரயில்களின் இயக்கத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ரயில் எண் 56751 நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் (புறப்படும் நேரம் காலை 7.10) வரும் 12, 13 ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 56754 திருச்செந்தூர் - நெல்லை பாசஞ்சர் ரயில் (மாலை 4.25) வரும் 12, 13 ஆகிய 2 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56004 திருச்செந்தூர் - நெல்லை பாசஞ்சர் ரயில் (காலை 10.00 மணி) வரும் 13, 14, 17, 22, 24, 25 ஆகிய 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 56003 நெல்லை - திருச்செந்தூர் பாசஞ்சர் ரயில் (மாலை 4.30) வரும் 13, 14, 17, 22, 24, 25 ஆகிய 6 நாட்கள் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16845 ஈரோடு - செங்கோட்டை எக்ஸ்பிரஸ் இன்று 7ம் தேதி மற்றும் 8, 9, 10, 12 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16846 செங்கோட்டை - ஈரோடு எக்ஸ்பிரஸ் வரும் 8, 9, 10, 11, 13 ஆகிய தேதிகளில் செங்கோட்டை - திண்டுக்கல் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16732 திருச்செந்தூர் - பாலக்காடு எக்ஸ்பிரஸ் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் திருச்செந்தூர் - நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 16731 பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நெல்லை - திருச்செந்தூர் இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது.
ரயில் எண் 56742 செங்கோட்டை - நெல்லை பாசஞ்சர் ரயில் வரும் 14, 17, 18, 24, 25 ஆகிய தேதிகளில் சேரன்மகாதேவி - நெல்லை இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. ரயில் எண் 56743 நெல்லை - செங்கோட்டை பாசஞ்சர் ரயில் வரும் 14, 17, 18, 24, 25 ஆகிய தேதிகளில் நெல்லை - சேரன்மகாதேவி இடையே பகுதி தூரம் ரத்து செய்யப்படுகிறது. மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அமைத்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.



