Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தெற்கு பிரகாரத்தில் மேற்கூரை அமைக்கும் பணி

திருச்செந்தூர், ஜூலை 6: திருச்செந்தூர் முருகன் கோயில் தெற்கு கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்லும் வழியில் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூர் முருகன் கோயில் மட்டுமே பரப்பளவிலும், பரந்து விரிந்த கடற்கரை ஓரமும் கம்பீரமாய் காட்சியளிக்கிறது. இதனாலே இங்கு வரும் பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடிவிட்டு இத்தலத்தில் தங்கி சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி விடுமுறை நாட்களில் திருச்செந்தூர் கோயிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும் வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் கூட்டம் காணப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்

கிழமை விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது. மேலும் தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. இத்திருக்0கோயிலில் கடந்த 2022ம் ஆண்டு திமுக ஆட்சியில் உபயதாரர் பங்களிப்புடன் ரூ.300 கோடியில் பெருந்திட்ட வளாகப் பணி தொடங்கப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டு வருகிறது. வடக்கு மற்றும் மேற்கு பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து செல்வதற்காக மேற்கூரை அமைக்கப்பட்டது. தற்போது தெற்கு கிரி பிரகாரத்தில் பக்தர்கள் நடந்து வரும் பாதையில் மேற்கூரை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதன் மூலம் பக்தர்கள் வெயில் மற்றும் மழை நேரத்தில் நடந்து செல்ல வசதியாக இருக்கும்.