தூத்துக்குடி, செப். 5: தூத்துக்குடியில் 3 ரவுடிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி புதிய முனியசாமிபுரம், மாரிமுத்து மகன் சிவா என்ற ஜீவா (20), அம்பேத்கர் நகர் சேகர் மகன் சந்திரன் (23), அம்பேத்கர் நகர் வெள்ளைப்பாண்டி மகன் சந்தனராஜ் என்ற பம்பு (25). இவர்கள் 3 பேர் மீதும் தாளமுத்துநகர் மற்றும் வடபாகம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. சிப்காட் காவல் நிலையத்தில் கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. தற்போது ஒரு வழக்கில் 3 பேரும் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கும், அமைதிக்கும் பங்கம் விளைவித்து வருவதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய எஸ்பி சிவபிரசாத் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கலெக்டர் விஷூ மகாஜன் உத்தரவின் பேரில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நகலை சிப்காட் போலீசார் பாளை. மத்திய சிறையில் வழங்கினர்.


