Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பனிமய மாதா பேராலய விழாவில் இன்றும், நாளையும் அன்னையின் திருவுருவ பவனி

தூத்துக்குடி, ஆக. 4:தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா, கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காலை முதல் மற்றும் 2ம் திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித சார்லஸ் ஆலய பங்கு இறைமக்கள், திருச்சிலுவை மழலையர் தொடக்கப்பள்ளி, மனையியல் கல்லூரி, புனித சார்லஸ் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கான திருப்பலி நடந்தது. தொடர்ந்து புனித யூதா ததேயு ஆலய பங்கு இறைமக்கள், கப்புச்சின் சபை துறவியர், திருஇருதய சபையினர், புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மற்றும் தாளமுத்துநகர் பங்கு இறைமக்கள், திருஇருதய சபை அருட்சகோதரிகளும், கல்வி நிறுவனங்களுக்குமான திருப்பலி நடைபெற்றது.

காலை 9.30 மணிக்கு நகர பொது நிலையினருக்கான திருப்பலி, 11 மணிக்கு ரீத்தம்மாள்புரம் பங்கு இறைமக்களுக்கான திருப்பலி நடைபெற்றது. இத்திருப்பலிகளை அத்தனாசியுஸ் ஜோ, சிபு ஜோசப், ததேயுஸ் ஆகியோர் நிறைவேற்றினர். திருவிழாவில் இன்று(4ம் தேதி) இரவு 9 மணிக்கு ஆலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடைபெறுகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ பவனி, நாளை (5ம் தேதி) இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய பங்குத்தந்தை ஜான்செல்வம் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஜெரால்டு, களப் பணியாளர் மைக்சன், சவேரியான இயேசு சபையினர், லசால் அருட்சகோதரர்கள், அடைக்கல அன்னை, அமலவை அருட்சகோதரிகள், பேராலய மேய்ப்புப் பணிக்குழுவினர், பக்த சபையினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.