Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆறுமுகநேரியில் நாளை மக்கள் நல குழு ஆர்ப்பாட்டம்

ஆறுமுகநேரி, ஜூன் 4: ஆறுமுகநேரி மக்கள் நல போராட்ட குழு ஆலோசனை கூட்டம் தலைவர் தங்கமணி தலைமையில் நடந்தது. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ராமசாமி, மதிமுக ஒன்றிய செயலாளர் முருகன், அதிமுக முன்னாள் நகர செயலாளர் அமிர்தராஜ், தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் சங்கம் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் தங்கதிலகா, பாஜ நகர தலைவர் தங்ககண்ணன், கவுன்சிலர்கள் ஆறுமுகநயினார், வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் திலீபன் பொய் புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதை தமிழக அரசு ரத்து செய்து அவரை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். இதை வலியுறுத்தி நோட்டீஸ் வெளியிடுவது. நாளை 5ம்தேதி வெள்ளிக்கிழமை ஆறுமுகநேரி மெயின் பஜாரில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. வரும் திங்கட்கிழமை தூத்துக்குடி கலெக்டர், எஸ்பியிடம் கோரிக்கை மனு அளிப்பது, மேலும் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.இக்கூட்டத்தில் பல்வேறு கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.