Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல் அறிமுக பயிற்சி

சாத்தான்குளம், ஜூன் 4:சாத்தான்குளம் ஒன்றியத்தில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான பாடநூல் அறிமுக பயிற்சி நடந்தது. சாத்தான்குளம் வட்டார வளமையத்தில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை கற்பிக்கும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான புதிய பாட நூல் அறிமுக பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை சாத்தான்குளம் வட்டார கல்வி அலுவலர் பெனிஷ்கர் துவக்கி வைத்து பேசுகையில், புதிய பாடப் புத்தகம் மாணவர்களுக்கு 21ம் நூற்றாண்டை எதிர்கொள்ள தேவையான திறன்களையும் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய தேவையான விழுமியங்களையும் உள்ளடக்கி உள்ளது என்றார். ஆசிரியர் கையேட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கிட மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார். பாடநூல் ஆசிரியர் கையேடு ஒருங்கிணைவு, புதிய கற்பித்தல் உத்திகள், மாணவர்களுக்கான மதிப்பீடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் 140-ற்கும் அதிகமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் மாணிக்கராஜ் பார்வையிட்டார். கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் ராஜன் ஜெபஸ்டின், அருண்குமார், ரத்ன பிரியா, தலைமை ஆசிரியர்கள் சகாயராஜ், தெபோரால், ராஜா சிங், ஸ்டெபி எமிமா, இடைநிலை ஆசிரியர்கள் மிஸ்பா, பதுவைத்துரை, ஜெய கிறிஸ்டி, கோல்டா, பெருமாள், ஜெபஸ்டின் ஜெயராஜ், ரஜீலா அன்னக்கிளி, சுஜாதா, ஜாஸ்மின், ஜெபமணி ஹெட்சி பாய் ஆகியோர் செயல்பட்டனர்.