Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

தூத்துக்குடி சிவன் கோயிலில் 10ம் தேதி கந்த சஷ்டி திருவிழா துவக்கம்

தூத்துக்குடி,நவ. 2:தூத்துக்குடி சிவன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா வரும் 10ஆம் தேதி துவங்குகிறது. 15ம் தேதி சூரசம்ஹாரமும் 16ம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.தூத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி சன்னதியில், கந்த சஷ்டி திருவிழா வரும் 10ம்தேதி தொடங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு வரும் 9ம்தேதி மாலை 7 மணிக்கு முருகன் சன்னதி முன்பாகக் காப்புக்கட்டுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. தொடர்ந்து, 10ம்தேதி காலை 7.25 மணிக்குக் கும்ப பூஜையும், 10.25 மணிக்குச் சிறப்பு அபிஷேகமும், நண்பகல் 12 மணிக்கு யாகசாலை பூஜை, பூர்ணாகுதி மற்றும் தீபாராதனைகளும் நடைபெற உள்ளது.

மாலை 7 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி வீதிஉலா எழுந்தருளலும், இரவு 9.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும் நடைபெறுகின்றன.கந்த சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாக 15ம்தேதி மதியம் 12.15 மணிக்கு ஆறுமுக அர்ச்சனையும், மாலை 4 மணிக்கு வேல் வாங்குதல் நிகழ்வும் நடைபெறுகின்றன. அதனைத் தொடர்ந்து மாலை 4.25 மணிக்கு சூரசம்ஹாரம் நடைபெறவுள்ளது. இதைதொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பானகம் அருந்தித் தங்களது விரதத்தை நிறைவு செய்வர். 16ம்தேதி காலை 7.05 மணிக்கு ஸ்ரீதெய்வானை அம்பாள் தபசு மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். மாலை 4.25 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி தபசு மண்டபத்திற்கு எழுந்தருளி காட்சி தருதலும், மாலை 6.05 மணிக்கு மாலை மாற்றுதல் வைபவமும் நடைபெறும்.

தொடர்ந்து, இரவு 8 மணிக்குச் சிவன் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நடைபெறவுள்ளது.கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு, கோயில் கலையரங்கில் நவ.9 முதல் 19ம்தேதி வரை 10 நாட்களுக்கு ஆன்மீக பக்திச் சொற்பொழிவு நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாக அலுவலர் தமிழ்ச்செல்வி தலைமையிலானவர்கள் செய்து வருகின்றனர்.