திருவாரூர்,அக்.30: திருவாரூர் மாவட்டம் பேரளத்தில் பட்டாக் கத்தியுடன் நடுரோட்டில் நின்று கொண்டு பொதுமக்களை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் பேரளம் கடை தெருவில் பட்டாக்கத்தியுடன் ஒருவர் நின்று கொண்டு அந்த வழியாக சென்று வரும் பொது மக்களை மிரட்டியது தொடர்பான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியானது.
இது தொடர்பாக பேரளம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சங்கவை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது பட்டாகத்தியுடன் பொதுமக்களை மிரட்டியவர் குடவாசல் தாலுகா வஸ்தராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மாரியப்பன் (25) என்பது தெரிய வந்தது. நிலையில் அவரை கைது செய்த போலீசார் நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் அங்குள்ள கிளை சிறையில் அடைத்தனர்.


