Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

முத்துப்பேட்டையில் டாஸ்மாக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

முத்துப்பேட்டை,அக்.30: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஆசாத்நகர் கோரையாறு பாலம் அருகே உள்ள அரசு டாஸ்மாக் கடையில் சம்பவத்தன்று இரவு மதுபானம் வாங்கிக்கொண்டு இருக்கும் போது ஏற்பட்ட தகராறில் சித்தமல்லி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான வீரசேகரன்(49) என்பவரை கோவலூர் கிராமத்தை சேர்ந்த கைலாசம் மகன் வீரப்பன்(32), காங்கேயம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் செந்தில்குமார்(30) ஆகியோர் சேர்ந்து வீரசேகரனை பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வீரசேகரன் பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த முத்துப்பேட்டை சப்.இன்ஸ்பெக்டர் ராகுல் வீரசேகரனை தாக்கிய வீரப்பன், செந்தில்குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.